search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் மர்ம மரணம்"

    சேலத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை, ராமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி தீபிகா (வயது 27). இவர்களுக்கு திருமணம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு முகிலன் (3) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் அறிவழகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர், தனது மனைவி தீபிகாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது தீபிகா வீட்டின் அறையில் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து அறிவழகன் குடும்பத்தினர் வீட்டின் வெளியே வந்து அக்கம், பக்கத்தினரிடம் தீபிகா அறை கதவை பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே ஓடி வாருங்கள் என கூறியுள்ளனர்.

    உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து தீபிகாவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி அம்மாப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீபிகா எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மகள் இறந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அவருடைய தாய் கதறி அழுதார். இன்று காலை பெற்றோர் தங்களது உறவினர்கள் சுமார் 100 பேருடன் திரண்டு சேலம் அரசு ஆஸ்பத்திக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு முற்றுகையிட்டு மகள் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கதறி அழுதனர்.

    அப்போது தீபிகாவின் தாயார் போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    இரவு 10 மணி வரை தீபிகா எங்களிடம் நல்லாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் எப்படி தற்கொலை செய்திருக்க முடியும்?. தீபிகா சாவில் மர்மம் உள்ளது. அவரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டு இருக்கிறார்கள். போலீசார் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    தொடர்ந்து பிரேத பரிசோதனை அறை முன்பு தீபிகாவின் குடும்பத்தினர் கதறி அழுதபடி இருந்ததை பார்க்கும்போது சோகத்தை ஏற்படுத்தியது.

    தீபிகாவுக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் சேலம் ஆர்.டி.ஓ.குமரேசன் மேல் விசாரணை நடத்த உள்ளார்.

    தலைவாசல் அருகே ஊர்க்காவல் படையை சேர்ந்த இளம்பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை அடித்துக்கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக பாட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். ஆட்டோ டிரைவர். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வமீனா (வயது 26). இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    தற்போது செல்வமீனா 2-மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கரு எதிர்பாராதவிதமாக கலைந்து விட்டது. இதனால் கோபம் அடைந்த கவியரசன், மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த செல்வமீனா வலி தாங்க முடியாமல் கதறி அழுதார்.

    நேற்று இரவு வீட்டில் செல்வமீனா திடீரென தூக்கில் பிணமாக தொங்கினார். தலைவாசல் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையறிந்த அவரது பாட்டி வெள்ளையம்மான், தனது பேத்தி உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் வெள்ளையம்மாள் தலைவாசல் போலீஸ் நிலையத்திற்கு சென்று, தனது பேத்தியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம். அவருடைய சாவில் சந்தேகம் உள்ளது.

    எனவே செல்வமீனா சாவில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், முதற்கட்டமாக மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் செல்வமீனா பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    செல்வமீனா சிறு வயதாக இருக்கும்போது, அவரது தாய் இறந்து விட்டார். இதனால் செல்வமீனா தனது பாட்டி வெள்ளையம்மாளின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்.

    பள்ளிப்படிப்பை முடித்த பின் அவர் சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார். கவியரசனும் அதே ஊர்க்காவல் படையில் தான் வேலை பார்த்து வந்தார். அப்போது தான் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒரே இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இதையறிந்த ஊர்க்காவல் படை அதிகாரிகள், கவியரசனை பணியில் இருந்து நீக்கம் செய்தனர். இதனை தொடர்ந்து கவியரசன், செல்வமீனாவை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் செல்வமீனா திடீரென மர்மமான முறையில் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    இண்டூர் அருகே வீட்டில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம், இண்டூரை அடுத்துள்ள மூக்கனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 28). இவர் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செந்தாமரை (21). இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது. 

    வீட்டில் செந்தாமரை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கணவன் வீட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செந்தாமரை உடலை இண்டூர் போலீசார் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் செந்தாமரையின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். அவரது சாவில் மர்மம் உள்ளது என்று கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

    சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சமாதானம் அடைந்த அவர்கள் செந்தாமரை உடலை வாங்கி சென்றனர்.
    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மூப்பனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சாந்தி (வயது 30). இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் சென்றார். இந்த நிலையில் சாந்தி ஜேடர்பாளையம் அருகே உள்ள குத்தனூர் அருகே உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அறைக்கு சென்று தூங்கினார். காலையில் பார்த்த போது சாந்தி மயங்கி கிடந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்று இன்று காலை சாந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக இறந்தார்? வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றார்.
    காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வந்தவாசி:

    சென்னை மணலியை சேர்ந்தவர் மதுசூதனன் மகள் மோனிஷா (வயது 20). இவரும் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தை சேர்ந்த எழிலரசன் (வயது 25) என்பவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு சாலவேடு கிராமத்திலேயே 2பேரும் வசித்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மோனிஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்தார்.

    சமீபத்தில் கணவன் வீட்டிற்கு வந்த மோனிஷாக்கு மீண்டும் உடல்நிலை பாதித்தது. நேற்று வீட்டிலிருந்த அவர் திடீரென உயிரிழந்தார்.

    மோனிஷாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் கீழ் கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் மோனிஷாவின் உடலை மீட்டு கணவர் எழிலரசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் மர்மசாவு தொடர்பாக அவரது கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஊட்டி:

    ஊட்டி அருகே உள்ள கீழ் தொரையட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (37). ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் இடுஹட்டி கிராமத்தை சேர்ந்த சோபனா (26) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சச்சின் (5) என்ற மகன் உள்ளார்.

    சோபனா வீட்டில் இருந்த படியே தையல் தொழில் செய்து வந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் சோபனா கணவரை பிரிந்து இடுஹட்டி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.கடந்த 5 ஆண்டுகளாக அவர் அங்கு தங்கி இருந்தார். இரு வீட்டாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன் சோபனா தனது கணவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

    இந்த நிலையில் சோபனா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து சோபனாவின் தந்தை ரவி தேனாடுகம்பை போலீசில் புகார் அளித்தார்.

    அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இந்த நிலையில் சோபனாவின் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு திரண்ட சோபனாவின் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறினர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சோபனா மரணம் குறித்து சமூக நலத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றனர். இதனை ஏற்று கொண்ட உறவினர்கள் சோபனா உடலை பெற்று சென்றனர்.

    இந்த நிலையில் சோபனாவின் கணவர் பிரபு, அவரது தந்தை மணி, தாய் சின்னரோசி, சகோதரர் முருகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வரதட்சணை கொடுமை, துன்புறுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை பெருந்துறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    பெருந்துறை:

    கடலூர் மாவட்டம், புவனகிரி, அரகஆலம்பாடி, முகந்தரியான் குப்பம் பகுதியைசேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் தேன்மொழி (வயது 19). இன்னும் திருமணமாகாத பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், புலவர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    கம்பெனி வளாகத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைபார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து 9 மணியளவில் ஹாஸ்டல் வளாகத்தில் துணிமணிகள் துவைக்கும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதனைக்கண்ட ஹாஸ்டல் வார்டன் தேன்மொழியின் பெற்றோருக்கு அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக தகவல் கொடுத்துள்ளார். இதனால் அலறியடித்து ஊரில் இருந்து தேன்மொழியின் தந்தை கோவிந்தராஜ் கம்பெனிக்கு வந்துள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் கடலூர் பகுதியை சேர்ந்த தேன்மொழியின் தோழியான தமிழ் என்பவரிடம் விசாரித்த போது, தேன் மொழி நேற்று இரவு துணி துவைப்பதற்காக ரூமில் இருந்து சென்றதாகவும், அங்குள்ள இரும்பு தூணை பிடித்த போது அதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    இதனை கேட்ட கோவிந்தராஜ் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் இறந்த தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.

    செய்துங்கநல்லூரில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள சந்தையடியூர் வேலன் காட்டான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது40). டிரைவர். இவரது மனைவி ஆனந்த ஈஸ்வரி (36). இவர் நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு பூஜா (4) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி ஆனந்த ஈஸ்வரியை பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் கடந்த 6-ந்தேதி வீடு திரும்பினார். கடந்த 7-ந்தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தந்தை பெரியசாமி, ஆனந்த ஈஸ்வரியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செய்துங்க நல்லூர் போலீசில் பெரியசாமி புகார் செய்தார். புகாரில் அவர் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.

    அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆனந்த ஈஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் தூத்துக்குடி ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
    ×